முதலில், இன்று செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிடுங்கள்



எந்த வேலையை முதலில் செய்ய வேண்டும், அடுத்து என்ன என்பவற்றை தெளிவாக வரிசைப்படுத்துங்கள்



தேவையற்ற காகிதங்கள், கோப்புகள், புத்தகங்கள் எல்லாவற்றையும் எடுத்து வேறிடத்தில் வைத்து விடுங்கள்



செய்யும் வேலை கடினமாக இருக்கும் பட்சத்தில், பிறரிடம் யோசனை கேட்டு தெளிவு பெறுங்கள்



உங்களுடைய வேலைகளை பிறரிடம் பிரித்துக் கொடுக்க வேண்டும்



உங்களுக்கு கீழ் பணிபுரிகிறவர், வீடென்றால் பிள்ளைகள், வாழ்க்கைத் துணையிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்



நீங்கள் மட்டுமே செய்யக்கூடிய வேலை எனில் உங்களை நீங்களே உற்சாகப்படுத்தி கொள்ளுங்கள்



“இந்த வேலையை மிக சுலபமாக செய்து விடுவேன்’’ என்று சொல்லிக் கொள்ளுங்கள்



இந்த வேலையை செய்து முடித்தால் ஏற்படப் போகும் விளைவுகளை எண்ணிப் பாருங்கள்



வேலை முடிந்த மனநிம்மதியும் திருப்தியும் கிடைக்கும் என நினைத்துப்பாருங்கள்