பச்சரிசியை வெந்நீரில் நனைத்து ஆப்பத்துக்கு அரைத்தால் மொறுமொறுப்பாக இருக்கும்



பால் அல்லது கஞ்சி ஆறினால் மேலே ஏடு படியும் லேசாகத் தண்ணீர் தெளித்து வைத்தால் ஏடு படியாது



இரண்டு டம்ளர் உளுந்துடன் ஒரு கரண்டி சாதம் சேர்த்து அரைத்து வடை தட்டினால் உளுந்து வடை சுவையாக இருக்கும்



வெங்காயத்தை வெறும் வாணலியில் வதக்கிவிட்டு பிறகு எண்ணெய்யில் வதக்கினால் சீக்கிரம் வதங்கிவிடும்



புழங்கலரிசி சேர்த்தால் சாம்பார் குழைவாகவும், கெட்டியாகவும் வரும்



உப்போ, காரமோ அதிகமாகிவிட்டால் இரண்டு ரஸ்க் துண்டுகளை பொடித்து சிறிது தூவினால் சரியாகிவிடும்



பொட்டுக் கடலை மாவை நீரில் கலந்து சேர்த்தால் சூப் திக்காக இருக்கும்



வெண்டைக்காயை வதக்கும்போது புளித்த மோரைச் சேர்த்தால் மொறுமொறுவென இருக்கும்



வத்தக் குழம்பில் கடைசியாக மஞ்சள், மிளகுத் தூளைச் சேர்த்தால் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்



பருப்புடன் ஒரு டீ ஸ்பூன் வெந்தயத்தையும் கலந்து வேக வைத்தால் சாம்பார் இரவு வரை ஊசிப் போகாமல் இருக்கும்