உஷார்! பிரஷர் குக்கரின் ரப்பரில் கவனம் தேவை! இதையெல்லாம் இனி ஃபாலோ பண்ணுங்க!
குக்கரை சரியான முறையில் கையாலாவிட்டால் பெரிய விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது
குறைந்தது ஆண்டுக்கு ஒரு முறையாவது சேஃப்டி வால் மற்றும் குக்கர் மூடியில் பயன்படுத்தும் ரப்பரை புதிதாக மாற்ற வேண்டும் .
குக்கரில் உள்ள ரப்பரை உரிய பராமரிப்பு முறைகளுடன் பயன்படுத்தினால் ரப்பர் நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாது.
தினமும் சமைத்தவுடன் பிரஷர் குக்கரை நன்கு சுத்தப்படுத்தவும்.
கேஸ்கட்’ எனும் ரப்பர் வளையத்தை, உபயோகப்படுத்தாதபோது குக்கரில் இருந்து கழற்றி, குளிர் சாதனப் பெட்டியின் பிரீஸரில் வைக்கலாம்.
‘கேஸ்கட்' விரைவாக சேதம் அடைவதைத் தடுக்க முடியும்.ஆறு மாதம் அல்லது வருடத்திற்கு ஒரு முறை கேஸ்கட்டை அவசியம் மாற்ற வேண்டும்.
வெயிலில் 10 நிமிடம் வரை உலர வைப்பது சிறந்தது.
குக்கரில் நேரடியாக சமைப்பதைத் தவிர்த்து, உள்ளே ஒரு எவர் சில்வர் பாத்திரத்தை வைத்து உணவு சமைப்பதே நல்லது.
குக்கரில் இருக்கும் கைப்பிடிகளில் உள்ள திருகுகள் துருபிடிக்காமல் இருப்பதற்கு அதனை மாதம் ஒரு முறை கழற்றி, சிறிதளவு தேங்காய் எண்ணெய் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.