செல்லப்பிராணி வளர்ப்பு மன அழுத்ததை போக்குமா என்பது குறித்து மருத்துவர்கள் அளிக்கும் விளக்கம் என்ன? ரிலாக்ஸாக இருக்க செல்லப்பிராணிகளுடன் நேரம் செலவிடு', `பூச்செடிகள் வளர்த்துப்பாரேன்' என்று மாற்று யோசனைகள் சொல்பவர்கள்தான் இன்றைக்கு அதிகம். செல்லப்பிராணிகள் நம் உணர்வுகளை புரிந்துகொள்ளும். செல்லப்பிராணிகள் வளர்க்கப்படும் வீடுகளில் வளரும் குழந்தைகளைக் கவனித்திருக்கிறீர்களா? அந்த குழந்தகள் பொறுப்பானவர்களாக, பிறரின் உணர்வுகளை மதிக்கத் தெரிந்த, மற்ற உயிர்களின் இன்ப, துன்பங்களைப் புரிந்துகொள்பவர்களாக இருப்பதை அறியலாம். ஒருவரின் மனநலன் மேம்பட்டு இருக்கும்போது, இயல்பாகவே அவரின் உடல்நலனும் மேம்பட்டுவிடும் பெட் தெரபி' என்றொரு உளவியல் சிகிச்சை முறை, சமீபகாலமாக பரவலாக அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. செல்லப்பிராணிகள் நமக்கு நன்மைகள் பல தந்தாலும்கூட, அவற்றைச் சரியாகப் பராமரிக்கவும் வேண்டும். செல்லப்பிராணிகளுடன் அதிக நேரம் செலவிடுவது மிகவும் நல்லது. செல்லப்பிராணிகள் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அளவில்லா அன்பை தரும்.