நவீன காலத்தில் பலரும் மன அழுத்த பிரச்சினையால் அவதிப்படுகின்றனர்



குழந்தைகள், இளம் வயதினர், பெரியவர்கள் என அனைவருக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது



தேவையற்ற சிந்தனைகளும், அலுப்பான தினசரி வேலைகளும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது



நாளடைவில் இதனால் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படும்



மன அழுத்ததில் உள்ளவர்களின் உடல் எடை அதிகரிப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது



ஆஸ்திரேலியாவை சார்ந்த ஹெர்பர்ட் ஹெர்சாக் என்பவர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார்



மன அழுத்ததில் இருப்பவர்கள் அதிகமான கலோரி உணவுகளை சாப்பிடும் போது நல்ல உணர்வு கிடைக்குமாம்



நல்ல உணர்வு கிடைப்பதற்காக நிறைய உணவுகளை சாப்பிட தோன்றும்



மன அழுத்தம் உள்ளவர்களுக்கு இனிப்பான உணவுகளை சாப்பிடும் ஏக்கம் இருக்குமாம்



இதனால் உடல் எடை கூடுகிறது