சத்து மாத்திரைகள், உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் போது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுபவை அதை எடுத்துக் கொள்ளும் முன்பாக பின்வரும் விஷயங்களை நாம் பரிசீலனை செய்ய வேண்டும் விளம்பரத்தில் சொல்கிறார்கள் என்று சத்து மாத்திரை எடுத்துக் கொள்வது தவறு மிகுதியாக எடுத்துக் கொண்டால் உடல்நல கோளாறுகள் உண்டாகக் கூடும் அனைத்து சத்து மாத்திரைகளிலும் மூல பொருள் ஒரே மாதிரியாக சேர்க்கப்படுவதில்லை உடலுக்கு எவ்வளவு டோஸ் எடுத்துக் கொள்ளலாம் என்பதை தெரிந்து சாப்பிட வேண்டும் என்னென்ன பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பதை கவனமாக படித்துப் பார்த்து வாங்கவும் ஊக்க மருந்துகளை எடுத்துக் கொண்டால் சத்தான உணவு தேவையில்லை என்று அர்த்தம் ஆகிவிடாது ஊட்டச்சத்து நிபுணர் அல்லது மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை மேற்கொள்ளவும்