பெரும்பாலான பெண்கள் உபயோக்கும் சரும பராமரிப்பு பொருட்களில் ஒன்று லிப் பாம் லிப்ஸ்டிக் பயன்படுத்த விரும்பாத பெண்கள் லிப் பாமை பயன்படுத்துவார்கள் ஆனால் லிப் பாம் வாங்கும்போது அவை உங்களுக்கு ஏற்றதானதா என்று பார்த்து வாங்கியதுண்டா? உங்களுக்கு ஏற்ற லிப் பாமை எப்படி தேர்வு செய்வது? டிப்ஸ் இதோ! முதலில் நீங்கள் என்ன காரணத்திற்காக லிப் பாமை பயன்படுத்துகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள் உங்கள் உதடு வறண்டே இருந்தால் மாய்ஸ்சுரைஸர் கொண்ட லிப் பாமை பயன்படுத்தினால் போதும் உங்கள் உதடுகள் வெடித்து காணப்படால் சரும நிபுணரை அணுகி காரணத்தை அறிந்து அதற்கு ஏற்ற லிப் பாமை வாங்கலாம் கருமையான உதடுகள் உள்ளவர்கள் மாய்ஸ்சுரைஸர் மற்றும் சன்ஸ்க்ரீன் உள்ள லிப் பாம் பயன்படுத்தலாம் வெறும் அழகுக்காக லிப் பாமை உபயோகிப்பவர்கள் மாய்ஸ்சுரைஸர் கொண்ட லிப் பாம் பயன்படுத்தினாலே போதுமானது வாசனை இல்லாத லிப் பாமை பயன்படுத்துவது நல்லது