பாலை காய்ச்சி ஒரு டிஃப்பன் பாக்ஸில் ஊற்றி ஆற வைக்கவும் பால் லேசாக வெதுவெதுப்பாக இருக்கையில் ஒரமோர் சேர்க்கவும் இதை ஒரு கரண்டி வைத்து லேசாக கலக்கி விட வேண்டும் பின் டிஃப்பன் பாக்ஸை மூடி ஹாட் பாக்சுக்குள் வைக்கவும் பின் ஹாட் பாக்ஸை மூடி அப்படியே வைத்து விட வேண்டும் இதை எட்டு மணி நேரத்திற்கு பின் திறந்து பார்க்கவும் தயிர் நன்கு கெட்டி பதத்தில் வந்திருக்கும்