1 கப் தினை , 1/4 கப் பாசி பருப்பை நெய் சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும் தினை அரிசி, பாசி பருப்புடன் சிறிது ஓம நீர், 3 3/4 கப் நீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும் ஒரு பெருங்காய கட்டியை கால் கப் சுடு தண்ணீரில் 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும் முந்திரி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை நெய்யில் வறுக்க வேண்டும் பெருங்காயம் சேர்த்த தண்ணீரை இதில் சேர்த்து லேசாக கொதிக்க விட வேண்டும் இதை வேக வைத்த பொங்கலோடு சேர்த்து கிளற வேண்டும் 2 ஸ்பூன் நெய், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி இறக்க வேண்டும் அவ்வளவுதான் சுவையான தினை பொங்கல் தயார்.