1/2 கப் பச்சரிசியை கழுவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும் இதை குக்கரில் 1 கப் பால் சேர்த்து மூடி அடுப்பில் வைக்கவும் குறைந்த தீயில் 15 நிமிடம் வெந்த பின் சாதத்தை கரண்டியால் மசிக்க வேண்டும் மற்றொரு பாத்திரத்தில் தண்ணீரில் முக்கால் கப் கற்கண்டு சேர்த்து கரையும் வரை காய்ச்சவும் கற்கண்டு நீரை சாதத்தில் சேர்த்து 5 நிமிடம் குக்கரை மூடாமல் வேக வைக்க வேண்டும் இதனுடன் கால் கப் பால் சேர்த்து கெட்டிப்பதம் வரும் வரை வேக வைக்க வேண்டும் இதனுடன் முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள் ஆகியவற்றை நெய்யில் வறுத்து சாதத்தில் சேர்த்து விட வேண்டும் பின் 2 ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும். அவ்வவுதான் சுவையான கற்கண்டு சாதம் தயார்