பெருந்தலைவர் என்று தமிழ்நாடு மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் காமராஜர் இவர் ஏழை எளிய மக்களுக்காக ஆற்றிய பணிகள் அதிகம் இவர் முதல்வராக இருந்த போது ஏழை மக்களுக்கு அது பொற்காலமாக இருந்தது அந்த ஒப்பற்ற வள்ளல் குறித்து இந்த பதிவில் நாம் முழுமையாக காணஉள்ளோம் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தும் சாகும் வரை அவர் வாடகை வீட்டிலேயே வசித்தார் மேலும் கதர் ஆடையினை மட்டுமே வைத்திருந்தார் மேலும் அவரது வங்கிக்கணக்கில் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வைப்புத்தொகை இல்லை தமிழக இளைஞர்கள் படித்து முடித்து வேலை செய்யவேண்டும் என்று தனது முற்போக்கு சிந்தனையில் அவர் பல திட்டங்களை மக்களுக்காக கொண்டு வந்தார் தென்னாட்டு காந்தி,படிக்காத மேதை,கர்மவீரர், பெருந்தலைவர் ,கல்விக்கண் திறந்த காமராஜர் என்பது அவரது சிறப்புப் பெயர்கள் காமராஜர் சமுதாயத்தில் இருந்து கைவிடப்பட்ட பல ஏழைகளுக்கு உதவினார்