முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான விரத நாட்களில் ஒன்று தைப்பூசம்



தை மாதத்தில் வரும் பெளர்ணமியுடன், பூசம் நட்சத்திரம் இணையும் நாளை தைப்பூச நாளாக அனுசரிக்கப்படுகிறது



அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடான பழனியில் தைப்பூசம் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும்



இந்த ஆண்டு தைப்பூச விழா வரும் ஜனவரி 25 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது



லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு காவடி, பால்குடம் ஏந்தி பாதயாத்திரையாக சென்று நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்



முருகப் பெருமானுக்குரிய கந்தசஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ் உள்ளிட்ட பாடல்களை பாராயணம் செய்தால் சிறப்பு



இது எதுவும் இல்லை என்றால் கூட வீட்டில் விளக்கேற்றி ஓம் சரவண பவ என்று சொன்னால் கூட போதுமானது



விரதம் இருப்பவர்கள் மாலையில் கோவிலுக்கு சென்று முருகப் பெருமானை தரிசித்த பிறகே விரதம் முடிக்க வேண்டும்



சிறப்பு வாய்ந்த தைப்பூச திருநாளில் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும் என்பது ஐதீகம்



குழந்தை வரம், திருமணம், ஆயுள் ஆகியவை கிடைப்பதுடன், பூஜை, அபிஷேகங்களை கண்டால் சகல பாவங்களும் நீங்கும் என நம்பிக்கை