கந்தசஷ்டி திருவிழா வரும் நவம்பர் 13 ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி முடிவடைகிறது



அழகன் முருகனுக்கே உரிய இந்த திருவிழா திருச்செந்தூரில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும்



கந்தசஷ்டியின் போது விரதம் இருந்து வழிப்பட்டால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம்



பிரதமையில் துவங்கி, சஷ்டி திதி வரையிலான ஆறு நாட்கள் பக்தர்கள் விரதம் இருப்பார்கள்



சஷ்டி நாளில் பக்தர்கள் கோயிலிலோ அல்லது வீட்டிலோ பூஜை செய்யலாம்



கடுமையாக விரதம் இருப்பவர்கள் 7 நாள் விரதத்தில் மிளகு விரதம் கடைபிடிப்பார்கள்



பாலும் பழமும் மட்டும் எடுத்துக்கொள்வது, கீரை உணவு வகைகள் மட்டும் எடுத்து கொள்வது என விரதம் இருப்பார்கள்



கந்த சஷ்டி விரதம் இருந்து முருகனை வணங்கினால் அனைத்தும் நன்றாக நடக்கும் என்பது நம்பிக்கை



கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும்



மதியம் உச்சிவேளையில் பச்சரிசி உணவில் தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம்