முதலில் 2 கப் அரிசி மாவை வாசம் வரும் வரை வறுத்துக்கொள்ளவும்



உப்பு, தண்ணீர் சேர்த்து புட்டு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்



இந்த மாவை இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் வேகவிடவும்



வெந்ததும் ஆறவைத்து கட்டிகளில்லாமல் உதிர்த்துக்கொள்ளவும்



ஒன்றரை கப் வெல்லத்துடன் கால் கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும்



வெல்லம் உருகியதும் புட்டமுதுடன் சேர்த்து கிளற வேண்டும்



நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய் பொடியை இதனுடன் சேர்க்கவும்



அவ்வளவுதான் சுவையான புட்டமுது தயார்