கடந்த ஜனவரி 20-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட DeepSeek AI ஆப்பிள் மொபைல் பயனாளர்களால் அதிகமாக பதிவிறக்கப்பட்டது.
சீனா ஹெட்ஜ் ஃபண்ட் ஹை ஃப்ளையர், 2023-ல் DeepSeek-ஐ நிறுவியது.
சாட்போட்கள் மற்றும் பிற AI அடிப்படையிலான கருவிகளை ஆதரிக்கக்கூடிய LLM-களை உருவாக்குகிறது.
கணிதம் மற்றும் குறியீட்டு முறைகளுக்கு மிகவும் ஏற்றதாக இருப்பதால் மற்ற AI நிறுவனங்களுக்கு பெரும் போட்டியாக பார்க்கப்படுகிறது.
AI ChatGPT-க்கு தேவைப்படும் $100 மில்லியனுடம் ஒப்பிடும்போது, DeepSeek-ன் லேட்டஸ்ட் V3 மாடல் $5.5 மில்லியனில் DeepSeek பயிற்சி பெற்றதாக கூறப்படுகிறது.
DeepSeek, ChatGPT-ஐ விட 40% அதிக திறன் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மதிப்புகளுக்கு ஏற்ற பதில்களை தணிக்கை செய்கிறது.
ChatGPT போல இல்லாமல் செயலிறக்கம் செய்வதற்கும் படிப்பதற்கும் Coding இலவசமாக உள்ளது.
உருவாக்குவதற்கும் இயக்குவதற்கும் மலிவாகவும், எளிமையாகவும் இருக்கிறது.
DeepSeek, GPT 4-ஐ விட வேகமாகவும் நடைமுறைக்கு உறியதாகவும் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.