AI-ட்ட இதெல்லாம் பகிர வேண்டாம்!

Published by: ABP NADU

வளர்ந்துவரும் AI-யினால் மனிதனின் வேலைகள் சுலபமானாலும், ஆபத்துகளும் அதிகமாகவே உள்ளன.

தனிப்பட்ட அல்லது மருத்துவ விவரங்கள் போன்றவற்றை Chat GPT உட்பட எந்த செயற்கை நுண்ணறிவு சேட்போட்களிடம் அதிகம் பகிரக் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

1. தனிப்பட்ட தகவல்கள்

பெயர், முகவரி, தொலைபேசி எண் போன்ற தகவல்களை பகிர்வதன் மூலம் உங்கள் செயல்பாடுகள் கண்காணிக்கப்படலாம்.

2. நிதி தகவல்

வங்கி கணக்கு எண், கிரெடிட் கார்டு எண் போன்ற தகவல்களை நீங்கள் பகிர்ந்தால், அவற்றைக்கொண்டு உங்கள் அடையாளங்கள் திருடப்படலாம்.

3. கடவுச்சொற்கள்

எக்காரணம் கொண்டும் உங்கள் கடவுச்சொற்களை பகிராதீர்கள். உங்கள் கணக்குகளையும் தரவுகளையும் திருட பயண்படும்.

4. ரகசியங்கள்

சேட்போட்ஸ் ஒரு நபர் அல்ல. உங்கள் ரகசியம் பாதுகாப்பாய் இருக்கும் என நம்பவேண்டாம்.

5. மருத்துவ அல்லது சுகாதார ஆலோசனை

AI-யிடம் சுகாதார அலோசனைகள் கேட்க வேண்டாம். உங்கள் உடல்நல விவரங்கள், இன்சூரன்ஸ் எண் போன்றவற்றை பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

6. வெளிப்படையான உள்ளடக்கம்

வெளிப்படையான சில விஷயங்களை பகிர்வதால் AI உங்களை தடைசெய்யலாம். இணையம் எதையும் மறக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

7. உலகம் அறியக்கூடாதவை

உலகம் அறியக்கூடாது என்று நீங்கள் விரும்பும் எதையும் சேட்போட்ஸிடம் பகிராதீர்கள். அவை சேமிக்கப்பட்டு மற்றவர்களிடம் பகிரப்படாம்.