ஒரு ஆண்டில் அதிக ஆட்டங்களில் விளையாடிய கிரிக்கெட் அணி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது இந்திய அணி இந்த ஆண்டில் இதுவரை 62 சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் இந்திய அணி விளையாடியுள்ளது 2009 - ல் ஆஸ்திரேலிய அணி 61 சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடியதே இதுவரை சாதனையாக இருந்து வருகிறது இந்த ஆண்டில் இதுவரை 39 டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடியுள்ளது நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது டி20 ஆட்டம்தான் இந்திய அணிக்கு நடப்பாண்டில் 39- வது ஆட்டம் ஆகும் முன்னதாக, கடந்த மாதம் ஒரு சாதனையை இந்திய கிரிக்கெட் அணி நிகழ்த்தியது அதிக ஆட்டங்களில் வெற்றி பெற்ற அணியும் இந்திய கிரிக்கெட் அணியாகவே இருக்கிறது கடந்த மாதம் 25ஆம் தேதி நிலவரப்படி, இந்திய அணி 39 ஆட்டங்களில் இந்த ஆண்டு மட்டும் வெற்றி பெற்றுள்ளது அதில் டி20 ஐ பொறுத்தவரை 24 வெற்றிகளை பெற்றுள்ளது இந்திய கிரிக்கெட் வீரர்களும், இந்திய அணியும் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது