மெல்லியதாக நறுக்கிய 4 வெங்காயத்தை கைகளால் அழுத்தம் கொடுத்து பிசையவும் இதனுடன் பொடியாக நறுக்கிய, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்க்கவும் கால் கப் மைதா மாவு, 3 ஸ்பூன் அரிசி மாவை சேர்த்து நன்கு பிசையவும் நீர் சேர்க்க வேண்டாம், வெங்காயத்தில் உள்ள நீரே போதுமானது இப்போது அரை ஸ்பூன் உப்பு, 1 ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து பிசையவும் இக்கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்க இதை வடையாக தட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும் அவ்வளவுதான் மொறு மொறு வெங்காய வடை தயார்