சுரைக்காயை தோல் நீக்கி 1 கப் அளவு துருவி எடுத்துக்கொள்ளவும்



சுரைக்காயை பச்சை வாசம் போகும் வரை நெய்யில் வதக்கவும்



பாத்திரத்தில் அரை லிட்டர் பால் காய்ச்சி, அதில் வதக்கிய சுரைக்காய் சேர்க்கவும்



இதில் கால் கப் சர்க்கரை, 2 ஏலக்காய் சேர்க்க வேண்டும்



5 நிமிடம் கொதித்ததும் இதில் 3 டேபிள் ஸ்பூன் கண்டென்ஸ்ட் மில்க் சேர்க்கவும்



ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும்



நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையை பாயாசத்தில் சேர்க்கவும்



அவ்வளவுதான் சுவையான சுரைக்காய் பாயாசம் தயார்