ஒரு பீட்ரூட், 3 உருளைக்கிழங்கை வேக வைத்து ஆற வைக்கவும் கொதிக்கும் தண்ணீரில் சேமியாவை வேக வைத்து நீரை வடிக்கவும் பச்சை பட்டாணியை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து இஞ்சி, பூண்டு சேர்க்கவும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி பச்சைப் பட்டாணி சேர்க்கவும் பின் மசித்த உருளைக்கிழங்கு மற்றும் அரைத்த பீட்ரூட்டை சேர்க்கவும் பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தே. அளவு உப்பு சேர்க்கவும் 2 நிமிடங்கள் வதக்கி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும் இந்த கலவையை கட்லெட் வடிவில் தயாரித்து எடுக்கவும் இதை பொரித்து எடுத்தால் சுவையான கட்லெட் தயார்