3 கப் பச்சரசி, முக்கால் கப் உளுந்தை 4 மணிநேரம் ஊற வைத்து எடுக்கவும் பின் இதனுடன் துருவிய முழு தேங்காய் 1 கப், பழைய சாதம் சேர்க்கவும் மேற்கூறிய அனைத்தையும் ஆப்ப மாவு பதத்தில் அரைக்கவும் இந்த மாவை 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும் அடுத்த நாள் காலையில் இந்த மாவு பொங்கி இருக்கும் இந்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும் இந்த மாவில் ஆப்பம் செய்தால் நன்றாக வரும்