ஜவ்வரிசியை 8 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும் உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உறித்து, துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும் வேர்க்கடலையை வறுத்து, தோல் நீக்கி, கொர கொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும் பாத்திரத்தில், வேகவைத்த உருளைக்கிழங்கு, ஜவ்வரிசி, எலுமிச்சை சாறு, சீரகம் சேர்த்திடுக இதனுடன் கல்லுப்பு, அரைத்த வேர்க்கடலை, கொத்தமல்லி இலை சேர்த்து பிசைய வேண்டும் பிசைவதற்கு முன் அனைத்து பொருட்களையும் நன்கு மசித்து விட வேண்டும் அடுப்பில் கடாய் வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும் கையில் சிறிது எண்ணெய் தடவிக்கொண்டு, ஜவ்வரிசி கலவையை வடை போல் தட்ட வேண்டும் தட்டிய வடையை எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுக்க வேண்டும் அவ்வளவுதான் சுவையான ஜவ்வரிசி வடை தயார்