தமிழ்நாட்டின் வானிலை நிலவரத்தை தெரிந்து கொள்வோம் நாளைய நிலவரம்( நவம்பர் - 25 ) தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் காற்றழுத்த தாழ்வு பகுதி , வட தமிழகத்தின் மேல் நகர்ந்து இன்று காலை வலுவிழந்தது தற்போது, வட தமிழகத்தின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் சென்னை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு அதிகபட்சமாக தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்) மழை பதிவு- 10 செ.மீ திருத்தணி (திருவள்ளூர்), காஞ்சிபுரம் தலா 7 செ.மீ