தமிழ்நாட்டில் வானிலை நிலவரத்தை தெரிந்து கொள்வோம் இலங்கைப் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்துள்ளது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 04.02.2023: தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். 05.02.2023 & 06.02.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கனமழை காரணமாக தஞ்சையில் இன்று ( பிப்.3 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. சென்னை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை: அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, ஊத்து (திருநெல்வேலி) 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது மண்டபம் (ராமநாதபுரம்) தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.