பங்குனி உத்திரம் தேரோட்ட விழா - புகைப்படங்கள்!
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோயிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சனைகள் நடந்தது.
தமிழ் மாதத்தின் 12 வது மாதமான பங்குனி மாதத்தையும் நட்சத்திரத்தில் 12வது நட்சத்திரமான உத்திரத்தையும் சேர்த்து, பங்குனி மாத பௌர்ணமணி தினத்தை பங்குனி உத்திர திருவிழாவாக உலகம் முழுவதும் தமிழர்கள் கொண்டாடுகின்றனர்.
பங்குனி உத்திரத்திற்கும் முருகப்பெருமானுக்கும் என்ன தொடர்பு? முருகப்பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடைபெற்றது இதே பங்குனி உத்திரம் நாளில் ஆகும்.
முருகன், சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்தது
ஆறாம் நாளான நேற்று முத்துகுமாரசுவாமி ,வள்ளி,தெய்வானை திருக்கல்யாணமும், திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத் தேரோட்டம்
அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக திகழ்வது சுவாமிமலை சுவாமிநாதசாமி கோயில். இங்கு இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
முருகப் பெருமானுக்குரிய கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், சண்முகக் கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ் உள்ளிட்ட பாடல்களை பாடினால் சிறப்பு.
இனிய பங்குனி உத்திர நல்வாழ்த்துகள்