டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பிறந்தநாள் - சிறப்பு தொகுப்பு!
மகாராஷ்டிராவில் மஹர் எனப்படும் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர். சிந்தனையாளர். சமூக சீர்திருத்தவாதி. சமத்துவத்தை வலிறுத்திய ஆளுமை
பம்பாய் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. மற்றும் முனைவர் பட்டம். லண்டன் பொருளாதாரப் பள்ளியில் எம்.எஸ்.சி மற்றும் டி.எஸ்.சி பட்டங்களைப் பெற்றவர்.
லண்டனின் கிரேஸ் இன்னில் பாரிஸ்டராக அறிவிக்கப்பட்ட முதல் தலித் அம்பேத்கர் ஆவார்.மூக் நாயக் (1920), பஹிஷ்க்ருத் பாரத் (1927), ஜனதா (1930) மற்றும் பிரபுத பாரத் (1956) ஆகிய பத்திரிக்கைகளை நடத்தினார்.
சமத்துவம் ,சமூக நீதி அவசியம் பற்றி தீவிரமாக பேசியவர். இந்திய அரசமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக மிக முக்கிய பங்காற்றியிருக்கிறார், அம்பேத்கர். பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக பொறுப்பேற்றார்.
1916-ஆம் ஆண்டு, அம்பேத்கர், அவருடைய 25-வது வயதில், இந்தியாவில் சாதி என்ற தலைப்பில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார்.
சாதி வெறி மாறுவதற்கு அம்பேத்கர் முன்வைத்தது, மற்ற சாதிக்குழுக்களுடன் அமர்ந்து உணவு உண்பதும், சாதிவிட்டு சாதி திருமணம் செய்து கொள்வதும் உதவும் என்றார்.
சொத்துரிமை, விவாகரத்து, குழந்தையை தத்தெடுத்தல், பலதார மணங்களை ஒழித்தல் போன்ற முக்கிய விவகாரங்களில் பெண்களுக்கு சம உரிமையை வழங்கும் வகையில் அம்பேத்கரால் கொண்டுவரப்பட்டது இந்துச் சட்ட மசோதா 1951 (Hindu Code Bill).
விடுதலை, சமத்துவம் மற்றும் தோழமை போன்றவை ஜனநாயகத்திற்கு தேவையான அடிப்படை அம்சங்கள் என்கிறார் அம்பேத்கர்.
இனிய அம்பேத்கர் ஜெயந்தி வாழ்த்துகள்!