ரஜினிக்கு அறிவிக்கப்பட்ட தாதா சாகேப் விருது 25ஆம் தேதி அவருக்கு அளிக்கப்படுகிறது. கணவரை விட்டு பிரிந்த நடிகை சமந்தா சில யூட்யூப் சேனல்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கிறார். அமெரிக்காவின் சிகாகோ நகரில் கதர் தொடர்பான தொழிலை தொடங்கவிருக்கிறார் கமல் ஹாசன் ஹரிஷ் கல்யாண் - ப்ரியா பவானி சங்கர் நடித்திருக்கும் ஓ மனப்பெண்ணே படம் ஹாட் ஸ்டாரில் வெளியானது. செல்வராகவன் - தனுஷ் இணையும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது ஆஸ்கர் விழாவில் யோகிபாபு நடிப்பில் வெளியான ‘மண்டேலா’ படம் தேர்வாகியுள்ளது. ராட்சசன் இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகுமார் நடித்திருக்கும் கொம்பு வெச்ச சிங்கமடா திரைப்படம் நவ.26ல் தியேட்டர்களில் வெளியாகிறது. சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இயக்குநர் ஷங்கரின் மருமகன் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது. சசிகுமார் நடித்திருக்கும்‘எம்ஜிஆர் மகன்’ தீபாவளியன்று ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.