உடலில் வியர்வை வெளியேறுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்!



வியர்வை வெளியேறுவதால் பல நன்மைகள் கிடைக்கும்



உடற்பயிற்சி செய்வதனாலோ அல்லது நடைப்பயிற்சி செய்வதாக இருந்தாலோ, எந்த வழியில் வியர்வை வெளியேறினாலும் அது நல்லதுதான்



வியர்வை வெளியேறுவதன் மூலம் உடலில் தங்கியுள்ள டாக்ஸின்கள் வெளியேறும்



உடலிலும் இதயத்திலும் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்



சருமத் துளைகளில் தங்கியுள்ள அழுக்குகள் வெளியேறி சருமமும் பொலிவோடு இருக்கும்



சிறுநீரக கல் உண்டாகும் வாய்ப்புகள் குறையலாம்



வியர்வையின் மூலம் உடலில் உள்ள உப்புக்கள் வெளியேறும்



தண்ணீர் அதிகம் குடிக்க தோன்றும். இப்படி தண்ணீர் அதிகம் குடிப்பதால், சிறுநீரகங்களின் செயல்பாடும் மேம்படும்



சமீபத்திய ஆய்வு ஒன்றில், வியர்வைக்கும், காயங்கள் குணமாவதற்கும் சம்பந்தம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது