ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நம் உடலால் உறிஞ்ச முடியாமல் போகும் போது நீரிழிவு நோய் உண்டாகிறது கடந்த ஆண்டு நடந்த ஆய்வின் தகவல் படி இந்தியாவில் மட்டும் சூமார் 10 கோடு மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் சர்க்கரை கலந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய மற்ற உணவுகளை பற்றி பார்ப்போம் பேக் செய்யப்பட்ட உணவுகள் - அதிக அளவு கார்போஹைட்ரேட்ஸ் கொண்ட இதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் உலர் பழங்கள் - இதில் அதிக அளவில் சர்க்கரை இருக்கிறது மது பானங்கள் - இதில் கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் சர்க்கரை இருக்கிறது பேக் செய்யப்பட்ட பழச்சாறுகள் - இரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகரிக்கலாம் எண்ணெயில் பொரித்த உணவுகள் - இது செரிமானத்தை தாமதம் ஆக்குவதால் சர்க்கரை அளவு அதிகமாகும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் - குறைந்த அளவில் நார்சத்துகள் இருப்பதால் எளிதாக சர்க்கரை அளவு அதிகரிக்கலாம்