கானா பாடல்களை பாடி, தமிழ் மக்களிடத்தில் பிரபலமடைந்தவர் பூவையார் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கேற்றார் சில நாட்களிலேயே அனைத்து சமூக வலைதளங்களிலும் ட்ரெண்டாக ஆரம்பித்தார் தொகுப்பாளர் மா.கா.பா ஆனந்த் இவருக்கு ‘கப்பீஸ்’ என பெயர் வைத்தார் அந்த கப்பீஸ் என்ற பட்டம் சில நாட்களில் இவருக்கு ட்ரேட் மார்க்கானது விஜய் நடித்த ‘பிகில்’ படத்தில் வெறித்தனம் பாடல் பாடியுள்ளார் அடுத்து விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்தார் லிஃப்ட் படத்தில் ‘இன்னா மயிலு’ எனும் பாடலையும் பாடியிருந்தார் தற்போது புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார் பூவையார் கார் முன் நின்று அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது