பிக்பாஸ் சீசன் 6 பங்கேற்பாளர்களுள் ஒருவர் ஆயிஷா பிக்பாஸிற்குள் நுழைவதற்கு முன் ரசிகர்களிடம் தனக்கு ஆதரவு தெரிவிக்குமாறு வீடியோ ஒன்றை வெளியிட்டார் இவர் தமிழ் சீரியல்களிலும் தெலுங்கு படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார் தமிழ் சீரியல் நாயகிகளுள் முன்னனி இடத்தில் இருப்பவர் இவர் பொன்மகள் வந்தால் தொடர் மூலம் சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தார் சத்யா தொடர் மூலம் மிகவும் பிரபலமானார் தில்லுக்கு துட்டு படத்திலும் சின்ன கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் பிக் பாஸ் வீட்டிற்குள் இவரை சிலர் ரவுண்டு கட்டி கேள்வி கேட்பது போன்ற ப்ரமோ வெளியாகியுள்ளது இந்த ப்ரமோக்கள் தற்போது ட்ரெண்டாகி வருகின்றது பிக்பாஸ் ப்ரமோக்களில் மிகவும் அப்செட்டாக காணப்படுகிறார் ஆயிஷா