துணிவு திரைப்படத்தின் ஷுட்டிங் நிறைவடைந்தது!

ஹெச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் மூன்றாவது திரைப்படம் துணிவு

அஜித்திற்கு துணிவு திரைப்படம் 61வது திரைப்படமாக அமைந்துள்ளது

படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது

வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் துணிவு

திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், பாங்காங், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது

இந்த திரைப்படத்தில் பெரும் நடிகர் பட்டாளமே நடித்துள்ளது

ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது

இப்படத்தினை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயிண்ட் மூவிஸ்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது

தற்போது துணிவு திரைப்படத்தின் ஷுட்டிங் நிறைவடைந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது