தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை கொட்டித்தீர்த்துக்கொண்டு இருக்கிறது மழைக்காலம் அனைவருக்கும் பிடித்தாலும் ஸ்டைலிங் என்பது சவாலான ஒன்றாக இருக்கிறது மழைக்காலத்திற்கு ஏற்ற சில ஸ்டைலான மற்றும் வண்ணமயமான உடைகளை எப்படி தேர்ந்தெடுப்பது என்பதற்கான டிப்ஸ் இதோ.. மஞ்சள், இளஞ்சிவப்பு, பிங்க் நிற உடைகள் உங்களை பிரகாசமாக காட்டும் வெள்ளை மற்றும் வெளிர் வண்ணங்களை அணிவதைத் தவிர்க்கவும் அடர் வண்ணங்களை பிரகாசமான வண்ணங்களுடன் இணைக்கலாம் பருத்தி, கைத்தறி மற்றும் கலவை துணியில் தயாரிக்கப்பட்ட ஆடைகள் ஈரப்பதத்தை உறிஞ்சக்கூடியவை கனமான டெனிம் ஆடைகளைத் தவிர்க்கவும் தளர்வான மற்றும் காற்றோட்டமான பிட்டிங் ஆடைகளைத் தேர்வு செய்யவும் தோல், கேன்வாஸ் அல்லது மழையால் நனையக்கூடிய மெட்டிரியலால் ஆன காலணியை தவிர்த்திடுங்கள்