இன்றைய உலகில் மனிதர்களுக்கு வாழ்க்கை முறை தொடர்பான நோய்கள் அதிகரித்து வருகிறது



ஆரோக்கியமான உணவுதான் நம் ஒட்டுமொத்த உடல்நலனையும் பாதுகாக்கிறது



அதற்கு உணவு மட்டும் போதாது.சாப்பிடும் முறைகளும், அதற்கு முன்னும் பின்னும் செய்யக்கூடாதவைகளும் உண்டு



செய்ய கூடாவதை என சில விஷயங்கள் உள்ளது. அது என்னவென்று பார்ப்போம்..



தாமதமாக சாப்பிடுவது - இரவில் தாமதமாக சாப்பிடுவது, குறிப்பாக தூங்கும் முன் சாப்பிடுவது உங்கள் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்

சாப்பிட்டவுடன் தூக்கம் - உணவு உண்ட உடனேயே தூங்குவது நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும்

புகைபிடித்தல் - உணவிற்குப் பிறகு சிகரெட் பிடிப்பது உடல்நலப் பிரச்சினைகளை மேலும் மோசமாக்கலாம்

மொபைல் பயன்பாடு - உணவுக்குப் பிறகு அதிகமாக போனை பார்ப்பது மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை உயர்த்தும்

தண்ணீர் குடித்தல் - சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பது செரிமானத்தை தாமதமாக்கும்

உணவிற்குப் பிறகு சுமார் 10 நிமிடங்களுக்கு ஒரு சிறிய நடைப்பயிற்சி செய்தால் செரிமானத்திற்கு நல்லது