இன்றைய இளைஞர்கள் வெற்றிலை பாக்கை விரும்புவதில்லை வெற்றிலை என்பது பைப்பரேசி என்ற வகையை சேர்ந்த ஒரு கொடியாகும் வெற்றிலையில் வைட்டமின் சி, தயாமின், நியாசின், ரிபோஃப்ளேவின், கரோட்டின், கால்சியம் என என்னற்ற சத்துக்கள் உள்ளன மேலும் வெற்றிலை உடலுக்கு என்னென்ன மாற்றங்கள் செய்யும் என்று பார்ப்போம் உடலுக்கு வெப்பம் தரும் இந்த வெற்றிலையானது, தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தையும் போக்க உதவும் தொடர்ந்து வெற்றிலை சாறை குழந்தைகள் குடித்து வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கலாம் இரவில் வெற்றிலையை நசுக்கி தண்ணீரில் போட்டுவைத்துவிட்டு, காலையில் வெறும் வயிற்றில் அதை குடித்தால் வயிற்று பிரச்சினை சரியாகலாம் வெற்றிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் நாள்பட்ட சளி குணமாகலாம் பாலிபினால் நிறைந்த வெற்றிலை, ஒரு இயற்கை ஆண்டிசெப்டிக் பொருளாகும் இப்படி உடலுக்கு அநேக நன்மை செய்யும் வெற்றிலையை இனி தவிர்க்காமல் எடுத்துக்கொள்வோம்