சரியாக தூங்கவில்லை என்றால் 1008 உடல் நல கோளாறுகள் வரும் தூக்கம் வருவதற்காக மக்கள் பல வைத்திய முறைகளை பின்பற்றி வருகின்றனர் Sleep Charity எனும் நிறுவனம் தூக்கம் குறித்த ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது அந்த ஆய்வு, வாழைப்பழம் நல்ல தூக்கத்திற்கு உதவும் என கூறுகிறது வாழைப்பழத்தில் உள்ள மெக்னீசியம், பொட்டாசியம் தசைகளை ரிலாக்ஸ் செய்ய உதவுமாம் அத்துடன் ட்ரிப்டோஃபேன் எனும் அமினோ அமிலம் தூக்கத்திற்கு உதவுமாம் வாழைப்பழம் மெலடோனின் எனும் ஹார்மோனை சுரக்க உதவும் இந்த ஹார்மோன் தூக்கத்தை தூண்ட உதவுகிறது இதுபோக பாதாம், மீன், முழு தானியங்கள் தூக்கத்திற்கு உதவும் கார்போஹைட்ரேட் உணவுகளையும், காஃபின் உள்ள பொருட்களையும் இரவில் தவிர்க்க வேண்டும்