முளைகட்டிய தானியங்கள் தரவல்ல ஈடில்லா நன்மைகள் குறித்த இத்தொகுப்பில் காணலாம்.



காலை உணவு எனில் 50-65 கிராம், மதிய உணவு எனில் 70 - 80 கிராம், இரவு உணவு எனில் 70 - 75 கிராம் என்ற அளவில் முளைகட்டிய தானியங்கள் சாப்பிடலாம். அப்படி சாப்பிடும்போது, அவ்வேளை உணவில் 50-50,



அதாவது பாதி அளவு சாப்பாடு, பாதி அளவு முளைகட்டிய தானியம் என்று இருக்குமாறு சாப்பிடலாம். இந்த அளவுகள் குறையலாம், ஆனால் அதிகமாகக் கூடாது.



மதிய மற்றும் இரவு உணவுகளுடன், வேகவைக்காத முளைகட்டிய தானியங்களை சேர்த்துச் சாப்பிடலாம். அல்லது சாப்பிடுவதில் பாதி அளவு வேகவைக்காமலும், பாதி அளவு வேகவைத்தும் சாப்பிடலாம்.



இரத்த ஓட்டத்திற்கும் முளைக்கட்டிய தானியங்கள் உதவுகின்றன.



இதில் அதிக அளவில் காப்பர் மற்றும் இரும்புச் சத்து உள்ளதால் இரத்த அணுக்களை அதிகரிக்கச்செய்யும். மேலும் ஆக்ஸிஜனை உறுப்புகளுக்கு செலுத்தி இரத்த ஓட்டத்தை சீராக்கும்.



உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு தானிய வகைகள் நல்ல பலன் தரும். பல வகைகளில் ஊட்டச்சத்துகளை உடலுக்குச் செலுத்துகிறது.



தானிய வகைகளில் வைட்டமின் C , A ஆகியவை இருப்பதால் நோய்த் தொற்று மற்றும் கிருமிகளைத் தாக்கி அழிக்கும் வல்லமைப் பெற்றது.



நீளமான அடர்த்தியான முடி வளர்ச்சிக்கும் ஊட்டமளிக்கும் குணம் முளைக்கட்டிய தானியங்களுக்கு உண்டு.



ஹெல்தியாக சாப்பிடுங்க..ஆரோக்கியமா வாழலாம்.