நீரஜ் சோப்ரா விரும்பி சாப்பிடும் உணவு இதுதான்!

Published by: அனுஷ் ச

பாரீஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்றவர் நீரஜ் சோப்ரா

இவர் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் பெற்றுத்தந்துள்ளார்

போட்டியின் போது ரசிகர்கள் சைவப்பிரியரா? அல்லது அசைவைப்பிரியரா? என்ற கேள்வியை எழுப்பினார்கள்

நீரஜ் சோப்ரா எந்த மாதிரியான உணவுப்பழக்கத்தை பாலோ செய்கிறார் என்பதை கூறியுள்ளார்

தினசரி உணவில் பழங்கள், சாலடுகள் போன்ற இயற்கை உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்

பழங்கள், தயிர், ஓட்ஸ், மூன்று-நான்கு முட்டையின் வெள்ளைக்கரு, ஆம்லெட், இரண்டு ரொட்டித் துண்டுகள், ஜூஸ் அல்லது உலர் பழங்கள் காலை உணவாக எடுத்துக்கொள்கிறார்

தயிர் மற்றும் சாதம், பருப்பு வகைகள், காய்கறிகள், வறுக்கப்பட்ட கோழி, சாலட் மதிய உணவாக எடுத்துக் கொள்கிறார்

உலர்ந்த பழங்கள், வாழைப்பழங்கள், சாறு அல்லது இளநீர் சிற்றுண்டியாக எடுத்துக் கொள்கிறார்

சூப், வேகவைத்த காய்கறிகள், சாலடுகள், பழங்கள், புரதம் நிறைந்த உணவுகள் இரவு உணவாக எடுத்துக் கொள்கிறார்

பால், பேரிச்சம்பழம் மற்றும் சில நேரங்களில் வெல்லம் இரவு உறங்கும் முன் சிற்றுண்டியாக எடுத்துக் கொள்கிறார்