மகளிர் பிரீமியர் லீக் போட்டியின் மூன்றாவது சீசன் பிப்ரவரி 14-ம் தேதி தொடங்குகிறது
தொடர்ந்த ஒரு மாதம் நடக்க இருக்கும் இந்த லீக்கின் இறுதிப்போட்டி மார்ச் 15-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த சீசனில் பெங்களூர் அணி வெற்றிபெற்றது. இந்த சீசனில் மீண்டும் பெங்களூரு அணி வெற்றி பெறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நடக்கவிருக்கும் போட்டியில் 5 அணிகள் கலந்துகொள்கின்றன. குஜராத் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேபிடல்ஸ், UP வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ்.
மொத்தமாக 22 போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் பெங்களூர் அணியும் குஜராத் அணியும் மோதுகின்றன
முதல் போட்டியானது குஜராத் வதோத்ராவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
போட்டிகளுக்கான டிக்கெட் விலை இடம், நகரம் மற்றும் இருக்கை தேர்வைப் பொறுத்தே அமையும்.
ஆரம்ப விலை: வதோத்ரா - ரூ.100, பெங்களூர் - ரூ.200 முதல் ரூ.300 வரை இருக்கும்.