ஆடி மாதம் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்! ஆடி மாதத்தில் ஈசனின் சக்தியை விட பார்வதி தேவியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது நம்பிக்கை ஆடிமாத பௌர்ணமி நாளில் தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது என்பது நம்பிக்கை. இந்நாளில் வைணவ ஆலயம் சென்று ஹயக்ரீவரை வணங்கிவர நல்ல பலன் கிட்டுமாம் ஆடி மாதத்தில் அம்மன் ஆலயங்களில் சாற்றப்படும் வளையல்களை வாங்கி அணிந்து கொண்டால் குழந்தை பாக்கியம் உண்டாகுமாம் ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது புண்ணியத்தை அளிக்குமாம் ஆடிமாதம் சுக்ல துவாதசியில் மகா விஷ்ணுவிற்கு விரதமிருந்து வழிபட்டால் செல்வம் பெருகுமாம் திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி ஆலயத்தில் ஆடி மாதத்தில் நடைபெறும் வளைகாப்பு வைபவம் மிகப் பிரசித்தி பெற்றது திருமாலுக்கு வாகனமாக அமைந்த கருடன், ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில்தான் அவதரித்தாராம் ஆடிச் செவ்வாயில் எண்ணெய் தேய்த்து தலை குளிக்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை ஆடி மாசம் சுக்ல தசமியில் திக் தேவதா விரதம் இருந்து திக் தேவதைகளை அந்தந்த திக்குகளில் வணங்கிப் பூஜித்தால் நினைத்தது நடக்குமாம் ஆடிமாத சுக்லபட்ச ஏகாதசியன்று அன்னதானம் செய்தால் சகல சௌபாக்கியங்கள் கிட்டுமாம்