ரமலான் நோன்பின் போது சுறு சுறுப்பாக இருக்க வழிகள்!

Published by: ABP NADU

இஸ்லாமியர்களின் புனித நோன்பு மாதமான ரமலான் ஆரம்பித்துள்ளது. இந்த வருட ரமலான், பிப்ரவரி 28 அன்று தொடங்கி மார்ச் 30 அன்று மாலை முடிவடைகிறது.

இந்த விரதத்தில் காலை சூரிய உதயத்தில் இருந்து சூரிய அஸ்தமனம் வரை உணவு மற்றும் திரவங்கள் உண்பதை இஸ்லாமியர்கள் தவிர்க்கின்றனர்

நோன்பின் போது உடல் பலவீனமானவர்களுக்கு தலைவலி, மயக்கம், குறைந்த ஆற்றல் போன்றவை ஏற்படும். அதனால் ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் நீர்சத்து தேவை

நோம்பிற்கு முன்பே அதிகமான தண்ணீர் உட்கொள்ளுதல் வேண்டும். காஃபின் கொண்ட பானங்களைத் தவிர்க்கவும்

நோன்பின் போது உணவு, உடற்பயிற்சி மற்றும் தூக்கத்தை சமநிலை படுத்தவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதனால் முன்னதாகவே தூங்கும் நேரங்களைத் தொடங்கவும், தூக்க முறைகளை மாற்றவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தயிர் போன்று மெதுவாக ஆற்றலை வெளிப்படுத்தும் உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது

வீட்டிற்கு வெளியேயான செயல்பாடுகள் மற்றும் அதிக வேலைகள் செய்வதை தவிர்க்கவும். மயக்கம் அல்லது உடல் பலவீனம் ஏற்பட்டால் நோம்பை முடித்துக்கொள்ளுங்கள்