இந்து சமயத்தின் மிகவும் முக்கியமான விஷேசமான மஹாசிவராத்திரி சிவபெருமானுக்கு அர்பணிக்கப்படும் புனித நாளாக உள்ளது.
இந்து சமய சந்திர மாதத்தின் 14-வது நாளில் சிவராத்திரியாக கொண்டாடப்படும்.
மஹா சிவராத்திரியை ஆண்டு தோறும் மாசி மாதம் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தி திதியில் இரவில் கொண்டாடப்படுகிறது.
வருடம் முழுதும் வரும் சிவராத்திரிகளைவிட பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் வரும் மஹாசிவராத்திரி ஆன்மீக முக்கியத்துவம் நிறைந்த நாளாக கருதப்படுகிறது.
இந்த இரவில், பூமியின் வடக்கு அரைக்கோளம் மனிதனுக்கு இயற்கை ஆற்றல் எழுச்சியை ஏற்படுத்துவதாகவும் கருதப்படுகிறது.
ஆன்மீக வழியில் உள்ளவர்கள், அகோரிகள், துறவிகள் போன்றவர்களுக்கு மஹா சிவராத்திரி மிகவும் முக்கியமான நாள்.
மக்கள் மஹா சிவராத்திரி அன்று சிவன் மற்றும் பார்வதிக்கு திருமணம் நடந்த நாளாக நினைத்து கொண்டாடுகின்றனர்.
சிலர் இந்நாளில் சிவன் தனது எதிரிகள் அனைவரையும் அழித்ததாக கூறுவர்.
துறவிகள் இந்நாளின் சிவன் கைலாச மலையில் ஒன்றோடு ஒன்றான நாளாக கருதுகின்றனர்.
பல ஆயிரம் ஆண்டுகள் தியானத்திற்கு பிறகு சிவன் கைலாச மலைபோல அசைவுகளின்றி அமைதியானார். அந்நாளே யோக மரபு படி மஹா சிவராத்திரி என்று கருதப்படுகிறது.
மேலும் யோக மரபில் சிவனை கடவுளாக அல்லாமல் யோக விஞ்ஞானத்தை தோன்றுவித்த முதல் ஆதி குருவாக கருதுகின்றனர்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு நம்பிக்கைகளை கடைபிடிக்க, மஹாசிவராத்திரி கொண்டாட்டம் அந்நாளின் இரவில் கோலாகலமாக நடந்து முடியும்.