அயோத்தியில் ராம நவமி கொண்டாட்டம் - புகைப்படங்கள்!
அயோத்தியில் வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ராம நவமியை முன்னிட்டு, ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஏராளமானோர் சரயு நதியில் புனித நீராடினர்.
பக்தர்களுக்காக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வழிபாட்டு நேரத்தை நீட்டிக்க முடிவு செய்துள்ளனர்.
ராம் கதா பூங்காவில் நடனம், இசை மற்றும் நாடகம் போன்ற பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
அயோத்தியில் உள்ள ராம் லல்லாவுக்கு அபிஷேசம் செய்யப்பட்டது.
சிறப்பு அலங்காரத்தில் பால ராமர்...
சுகாதாரத் துறை சாா்பில் 14 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சுகாதார மையங்களில் போதுமான எண்ணிக்கையில் மருத்துவா்கள் பணியில் இருக்கின்றனா்.
சூரிய தேவ் சூரிய வம்சத்தின் வழித்தோன்றலுக்கு அளித்த தெய்வீக ஆசீர்வாதங்களைக் குறிக்கும் வகையில், பகல் 12 மணிக்கு ராமரின் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி துல்லியமாக செலுத்தப்பட்டது.
ஐஐடி ரூர்க்கி மற்றும் ஐஐடி மெட்ராஸைச் சேர்ந்த பொறியாளர்கள் மற்றும் நிபுணர்கள் லென்ஸ்கள் மற்றும் கண்ணாடிகளைப் பயன்படுத்தி ஒரு சிக்கலான ஒளியியல் அமைப்பை உருவாக்கினர்.
நாடு முழுவதும் ராம நவமி கோலாகமாக கொண்டாடப்பட்டது.