உத்திர பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மஹா கும்பமேளா நடைபெறும்.
இந்த ஆண்டு மஹா கும்பமேளா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
பிரயாக்ராஜில் மஹா கும்பமேளா இன்று தொடங்கி பிப்ரவரி 26 வரை நடைபெறுகிறது.
பிரயாக்ராஜின் திருவேணி சங்கமத்தில் கொண்டாடப்படும் கும்பமேளா, மூன்று புனித நதிகளான கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதியின் சந்திப்பை நினைவுபடுத்துகிறது.
மகா கும்பத்தில் மூன்று அரச நீராடல்கள்(ஷாஹி ஸ்னான்) மற்றும் மூன்று மற்ற குளியல்கள் உள்ளன.
ஜனவரி 13, 14, 29 ஷாஹி ஸ்னானங்களும், பிப்ரவரி 3, 12, 26 மற்ற நீராடல்களும் கடைபிடிக்கப்படுகிறது.
மற்ற கும்பமேளாவைப்போல் இல்லாமல் மஹா கும்பமேளா பிரயாக்ராஜில் மட்டுமே நிரந்தரமாக நடைபெறுகிறது.
2013-ல் நடைபெற்ற மஹா கும்பமேளாவில் 10 கோடி பேர் கலந்து கொண்டு சாதனை படைத்தனர்.
இந்த ஆண்டு 6,832 ரூபாய் செலவில் 40 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ. 2 லட்சம் கோடி அளவிற்கு மாநிலத்தில் வர்த்தகம் நடைபெறும் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
4000 ஹெக்டேர் பரப்பளவில் கும்பமேளா மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
உத்திரபிரதேசம் காவல்துறை, 2700 AI செயல்படுத்தப்பட்ட கேமராக்களை நிறுவியுள்ளது.
இதனால், உலகின் மிகப்பெரிய மத நிகழ்வாக மஹா கும்பமேளா மாறியுள்ளது.