விநாயகர் சதுர்த்தி என்றாலே சிறியது முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை தெரு முனைகளில் பார்க்கலாம்
விநாயகர் சதுர்த்திக்கு மக்கள் இதற்காக பெரிய கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வார்கள்
மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். பொதுவாகவே மும்பையில் விநாயகர் சதுர்த்தி விசேஷமாக கொண்டாடப்படும்
புனேவில் உள்ள தகடுசேத் ஹல்வாய் கணபதி கோயில் ஆடம்பரமான அலங்காரத்திற்கு பெயர் போன கோயில்
கணிப்பாக்கம் விநாயகர் கோயில் என்றாலே மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். ஆந்திர பிரதேசத்தில் உள்ள சித்தூரில் இந்த விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
மஹாராஷ்ராவில் உள்ள அஷ்ட விநாயகர் கோவிலில் உள்ள விநாயகர் சிலை சுயம்புவாக உருவானதாக மக்கள் நம்புகிறார்கள். இந்த கோவில் மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்
திருச்சி மலைக்கோட்டையில் உள்ள இந்த விநாயகர் கோயில் மலை உச்சியில் உள்ளது. இங்கிருந்து மொத்த நகரத்தையும் மக்களால் பார்க்க முடியும்
பாண்டிச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவில் தென்னிந்தியாவில் உள்ள மிகவும் பிரபல கோயில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் உள்ள யானைக்காகவே மக்கள் பலரும் இங்கு சென்று வருகிறார்கள்