அட்சய திருதியை சிறப்பு என்ன? செய்ய வேண்டியது என்ன?
அட்சய திருதியை(Akshaya Tritiya) ஒரு நன்னாளாக கருதப்படுகிறது. இந்த தினத்தில் தொடங்கப்படும், மேற்கொள்ளப்படும் செயல்கள் அனைத்தும் சிறப்பானதாக அமையும் என்று நம்பப்படுகிறது.
இந்த நாளில் லட்சுமியின் அருள் நிறைந்திருக்கும் என்பதால் தங்கம் வாங்குவது மட்டுமல்ல, பிற நல்ல விசயங்களையும் செய்யலாம் என்று கூறப்படுகிறது.
அட்சய திருதியை அல்லது அட்சய் தீஜ் என்றழைக்கப்படும் இந்த நாள் இந்து மற்றும் சமணர்களின் புனித நாளாக கருதப்படுகிறது.
ஆண்டுதோறும் தமிழ் மாதமான சித்திரையில் அமாவாசைக்கு அடுத்து வரும் வளர்பிறையன்று வரும் திரிதியை நாளை , 'அட்சயதிரிதியை’ திருநாளாகக் கொண்டாடுகின்றோம்
தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் வாங்கினால் செல்வம் பெரும் என்று நம்பப்படுகிறது. பல நன்மைகள் நடக்கும் நாளாகவும் கருதப்படுகிறது. எண்ணங்கள் சிறப்பாக இருந்தால், அப்போது யாவும் நன்மையே என்பதை குறிக்கும் நாளாகவும் இந்த நாள்
உணவு தானியங்கள், தண்ணீர் நிறைந்த குடம் உள்ளிட்டவற்றை தானமாக கொடுத்தால் செல்வம் பெருகும் என்று கூறப்படுகிறது. அதோடு, இந்த சிறப்பு நாளில் அன்னதானம் செய்வது மிகவும் நல்லது என்றும் கூறப்படுகிறது.
சங்கீதம், கல்வி, கலைகள் உள்ளிட்ட பயிற்சிகளில் சேரலாம்.
அட்சய திருதியை தினத்தில் நல்ல எண்ணத்துடன் மன மகிழ்வுடன் நல்ல செயல்களை தொடங்கலாம்.
அட்சய திருதியை வாழ்த்துகள். செல்வம் பெருகட்டும்.