கண்ணில் தோன்றி
கன்னம் வழியோடி
நிலத்தில் வீழ்ந்து...



மறைந்து போவதால்
காதலும் கண்ணீர் போலே..



தீ எனத் தோன்றி
உதட்டில் உரசி
நெஞ்சில் புகைத்து



சாம்பலாய் போவதால்
காதலும் சிகரெட் போலே..



அப்பா கேட்டார்
அப்படி என்னாடா
கண்டாய் அவளிடம்



யாரும் அறியார்
யாருக்கும் உன்னில் தெரியாதது
எனக்குத் தெரிந்தது என்பதை...



வாரி வாரிக் கொடுத்தது
வற்றாது எஞ்சியிருக்கிறது
அன்பு



மழையடிக்குது குடை வேண்டாம்
குளிரடிக்குது போர்வை வேண்டாம்



தாகத்திற்கு தண்ணீரும் வேண்டாம்
அவள் என்னருகே



அவளில்லாவிடில்
ஒன்றுமே இல்லாத வெறுமை
அவளருகிருந்தால்
ஒன்றுமே தெரியாத நிலைமை
காதல்