அலியா பட் தனது வழக்கத்திற்கு மாறான மணப்பெண் தோற்றத்தால் பெரும் வைரலானார் ஏப்ரல் 14 அன்று மிகவும் சிம்பிளாக தனது வீட்டில் அலியா பட் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்டார். வழக்கத்துக்கு மாறாக சிவப்பு நிற லெஹங்காவிற்கு பதில் அழகிய வெண்ணிற புடவை அணிந்தார் இந்த புடவையில் தந்தம் மற்றும் தங்க டிசைன் செய்யப்பட்டுள்ளது. வடிவமைப்பாளர் சப்யசாச்சியின் லேபிளில் இருந்து திருமணப் புடவை வரவழைக்கப்பட்டது. திருமண நாளில் வெள்ளை நிற ஆடையில் இருந்து விலகி இருப்பது காலங்காலமாக மதிக்கப்படும் பாரம்பரியமாகும். ஆனால் அலியா இந்த கருத்துக்களை உடைத்து சிம்பிள் வெள்ளை நிற புடவை, நோ மேக்கப் லுக், லூஸ் ஹேர் என கலக்கிவிட்டார். ஆலியா தனது புடவையில் அழகான மற்றும் தனித்துவமான விவரங்களைச் சேர்த்துள்ளார். புடவையுடன் பளபளப்பான கையால் நெய்யப்பட்ட tissue veil அணிந்தாது மிகவும் அழகாக இருந்தது. மொத்ததில் லேட்டஸ்ட் மணப்பெண் தோற்றத்தைக் அருமையாக அணிந்து கலக்கினார் ஆலியா.