ஒரு நாளைக்கு தேவையான தண்ணீர் குடிக்க வேண்டும்.
2 -3 லிட்டர் தண்ணீர் குடிப்பது, உடல் வெப்ப நிலையை சீராக வைக்க உதவும்.
வெந்தயத்தை எடுத்து கொள்வது, உடல் குளிர்ச்சிக்கு உதவும்.
இரவு வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து, காலை அதை எடுத்து கொள்வது நல்லது.
கோடை காலத்தில் ஏற்படும் நீர் இழப்பை தடுப்பதற்கும்.
உடல் வெப்பத்தை சமநிலையில் வைப்பதற்கும், இளநீர் உதவும்.
இது உடலுக்கு குளிர்ச்சியை தரும்.
வயிற்றில் நல்லது செய்யும் பாக்டீரியா வளர்வதற்கு உதவும்.
கற்றாழை சதை பகுதியை தனியாக எடுத்து ஜூஸ் ஆக அரைத்து குடிக்கலாம்.
இது உடலுக்கு குளிர்ச்சியாக இருக்கும். மேலும், கண் எரிச்சல் போக்கும்.