குழந்தைகளுக்கு போதுமான அளவு தூக்கம் நிச்சயமாக தேவை. 



மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் தூக்கம் மிகவும் அவசியமானது.



மழலையர் குழந்தைகள் பொதுவாக 11 - 13 மணி நேரம் தூங்க வேண்டும்.



மனித உடலின் முக்கியமான கடிகாரம் மூளையின் ஹைபோதாலமஸிலிருந்து சுரக்கும்



மெலடோனின் என்ற ஹார்மோனால் கட்டுப்படுத்தப்படுகிறது. 



பொதுவாக நரம்பியல் பிரச்சனை இருக்கும் குழந்தைகள் தூக்க பிரச்சனையால் அவதிப்படுவார்கள்.



பிறந்த குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு சுமார் 15-16 மணி நேரம் வரை தூக்கம் அவசியம்.



நல்ல தூக்க பழக்கத்தை குழந்தைகளிடம் பழகுவது மிகவும் முக்கியம்.



குறிப்பிட்ட நேரத்தில் தினமும் படுக்கவைத்து குறிப்பிட்ட நேரத்தில் தினமும் எழுப்பவும்.



தாமதமாய் தூங்குவதை அனுமதிக்காதீர்கள். அவர்களின் படுக்கை அறையை இருட்டாகவும், அமைதியாகவும் வைத்து இருங்கள்.